WOW State Bank நிறுவனத்தில் புதிய வேலை – 640+ காலிப்பணியிடங்கள் | Last Date End Soon…!

Latest News

State Bank நிறுவனத்தில் புதிய வேலை – 640+ காலிப்பணியிடங்கள் |

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Channel Manager Facilitator, Channel Manager Supervisor & Support Officer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Channel Manager Facilitator, Channel Manager Supervisor & Support Officer பணிகளுக்கென மொத்தம் 641 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.இதில் ATM operations களில் பணிபுரிந்த அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 60 வயது முதல் அதிகபட்சம் 63 வயது வரை இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 60 முதல் 63 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.41,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வங்கி துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து நேரடியாக நேர்காணல் அல்லது கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

Leave a Reply

Your email address will not be published.