UPSC ல் 400 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

Latest News

UPSC ல் 400 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள National Defence Academy II பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தற்போது வெளியிட்ட அறிவிப்பில், National Defence Academy II தேர்வுக்கு மொத்தமாக 400 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.
  • Army Wing of National Defence Academy பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • Air Force and Naval Wings of National Defence பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Academy Physics, Chemistry , Mathematics பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 02.01.2004 ம் தேதி முதல் 01.01.2007 ம் தேதி வரையில் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று UPSC தெரிவித்துள்ளது.
  • இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Level 10 என்ற மத்திய அரசு ஊதிய விதிமுறைகளின் படி, ரூ.56,100/- மாதம் ஊதிய தொகை அளிக்கப்படும். இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்த விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST candidates / female candidates / Wards of JCOs / NCOs / ORs பிரிவினை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்களுக்கு ரூ. 100 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test (900 Marks) மற்றும் SSB Interview / Personality Test (900 Marks) மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று UPSC தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

Leave a Reply

Your email address will not be published.