தபால் துறையில் அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Latest News

தபால் துறையில் அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்; அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு 18 முதல் 60 வயது வரை உள்ள 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், காப்பீடு நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்கள், சுய உதவிக்குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட தலைமை தபால் நிலையங்களான கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய இடங்களிலும், மற்ற பகுதிகளில் உள்ள துணை தபால் நிலையங்களிலும் பெற்று கொள்ளலாம். மேலும் dokovilpatti.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பயோடேட்டா, வயது மற்றும் படிப்பிற்கான சான்று நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து வருகிற 28-ந் தேதிக்குள் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி 628501 என்ற முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். இதில் தகுதியானவர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.