Project Engineer பணிக்கு ரூ.55,000/- ஊதியம் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

Latest News

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Project Engineer பணிக்கு என மொத்தமாக 43 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் புரியுமாறு கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Bharat Electronic Limited (BEL)
பணியின் பெயர்Project Engineer
பணியிடங்கள்43
விண்ணப்பிக்க கடைசி தேதி28.06.2022
விண்ணப்பிக்கும் முறைOnline & Offline
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பணியிடங்கள்:

பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள Project Engineer பணிக்கு என மொத்தமாக 43 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Engineer கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ECE, MECH, IS, IT, CSE பாடப்பிரிவில் B.E / B.Tech Degree பெற்றவராக இருக்கலாம்.

Project Engineer அனுபவ விவரம்:

Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Software Development போன்ற பணி சார்ந்த துறைகளில் 2 வருடம் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

Project Engineer வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

OBC பிரிவினருக்கு 03 வருடம், SC / ST பிரிவினருக்கு 05 வருடம், PwBD பிரிவினருக்கு 10 வருடம் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

Project Engineer ஊதிய விவரம்:

இந்த BEL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

BEL தேர்வு செய்யும் விதம்:

Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

BEL விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.400/- விண்ணப்பக் கட்டணத்துடன் 18 % GST யும் செலுத்த வேண்டும்.

BEL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்குள் (28.06.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

BEL Notification & Application Link

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.