NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்) நிறுவனத்தில் ரூ.2,60,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு

Latest News

பணியிடம்:

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) நிறுவனத்தில் மேற்கண்ட பணிகளுக்கு கீழுள்ளவாறு 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Dy. General Manager – 08
  • Chief Manager – 10
  • Additional Chief Manager – 15
  • Dy. Manager – 02

கல்வித்தகுதி:

  • Dy. General Manager (Finance), Chief Manager (Finance) மற்றும் Additional Chief Manager (Finance) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் CA / ICWAI / ICMAI / MBA / Degree தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • Dy. Manager (Secretarial) பணிக்கு விண்ணப்பதாரர்கள் (Member of the Institute of Company Secretaries of India.) இந்திய செயலாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் தேவையான அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அனுபவம் குறித்த விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது விவரம்:

  • 01.06.2022 அன்றைய தினத்தின் படி, Dy. General Manager (Finance) 
  • பணிக்கு 52 வயது, Chief Manager (Finance) பணிக்கு 50 வயது, Additional Chief Manager (Finance) பணிக்கு 47 வயது, Dy. Manager (Secretarial) பணிக்கு 32 வயது, அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிகளுக்கு OBC விண்ணப்பதாரருக்கு 3 வருடமும், SC, ST விண்ணப்பதாரருக்கு 5 வருடம், PWD (General) Candidates விண்ணப்பதாரருக்கு 10 வருடம், PWD (OBC) Candidates விண்ணப்பதாரருக்கு 13 வருடம், PWD (SC/ST) விண்ணப்பதாரருக்கு 15 வருடமும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

  • Dy. General Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. (24.84 Lakhs per Annum)
  • Chief Manager மற்றும் Additional Chief Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.90,000/- /- முதல் ரூ.2,40,000/- வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. (22.03 Lakhs per Annum)
  • Dy. Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/-வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. (14.68 Lakhs per Annum)

விண்ணப்ப கட்டணம்:

UR / EWS / OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.854/- மற்றும் SC / ST / PWBD / Ex–servicemen விண்ணப்பதாரர்களுக்கு ரூ.354/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பின் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பங்கள் பெற்று சரியாக பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து 07.07.2022 அன்று 23.45 மணிக்குள் சமர்ப்பித்து பயனடையவும்.

Application link

Official website

Leave a Reply

Your email address will not be published.