DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Latest News
dfccil recruitment 2022 job vacancy details : Career Plaza
DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Dy. CPM / PM, Chief Traction Power Controller பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம்Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர்Dy. CPM / PM, Chief Traction Power Controller
பணியிடங்கள்11
விண்ணப்பிக்க கடைசி தேதி21.06.2022
விண்ணப்பிக்கும் முறைOffline
DFCCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான மத்திய அரசு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், Dy. CPM / PM, Chief Traction Power Controller ஆகிய பணிகளுக்கு என்று கீழுள்ளவாறு மொத்தமாக 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • DY. CPM / PM – 01
  • Chief Traction Power Controller – 05
  • Traction Power Controller – 05
DFCCIL கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது Diploma (3 ஆண்டுகள்) முடித்திருக்க வேண்டும்.

DFCCIL அனுபவ விவரங்கள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் வழக்கமான முறையில் ஒத்த பதவிகளில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ற பதவிகளில் பணிபுரிபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவம் குறித்த முழு விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

DFCCIL வயது வரம்பு:

DY. CPM / PM பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

DFCCIL ஊதிய தொகை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வான பின் பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப பணிக்கு தகுந்தாற்போல் Parent pay plus deputation duty allowance வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation basis அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்த உள்ளதால், இப்பணிகளுக்கு தேர்வுகள் மற்றும் நேர்காணல் இல்லாமல், நேரடியாக கலந்தாய்வின் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியான பணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி, தபால் அனுப்பி பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

DY. CPM / PM Notification & Application PDF

Traction Power Controller Notification & Application PDF

Chief Traction Power Controller Notification & Application PDF

Official Website

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.