+2 தேர்ச்சிக்கு உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

Job Notification Latest News

கர்நாடகம் மாநிலம், மைசூரில் செயல்பட்டு வரும் உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Secretariat Assistant(Gen) – 03
பணி: Junior Secretariat Assistant(F & A) – 03
பணி: Junior Secretariat Assistant(S & P) – 03

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer – 03

சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் சுருக்கெழுத்தில் எழுதியதை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, கணினியில் பணிபுரியும் திறன், தட்டச்சு திறன், சுருக்கெழுத்து திறன் போன்ற தேர்வில் பெறும் மத்திப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.cftri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 23.08.2021-க்குள் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.