ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஸ்மார்ட் கார்டு தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?

Latest News

தமிழகத்தில் ரேஷன் கார்டு தொலைந்து போனால் புதிய ஸ்மார்ட் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் எளிதாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் உணவு பொருட்களை வாங்க முடியும். ஏழை, எளிய மக்கள் ரேஷன் கார்டுகள் மூலம் பயனடைகின்றனர். மேலும் மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு இருப்பிட சான்றாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கடந்த மாதம் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதிகளையும், 14 வகை இலவச மளிகை பொருட்களையும் வழங்கியது. தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து ரேஷன் கார்டுகள் இல்லாதோர் ரேஷன் கார்டுகள் பெற புதிதாக விண்ணப்பித்து வருகின்றனர். ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம், கார்டுகளின் வகைகளை மாற்றுதல் போன்ற பணிகள் தற்போது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து எதிர்பாராத விதமாக ரேஷன் கார்டு தொலைந்து போனால் புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறும் வழிமுறைகள்:
  • முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிட்டு அந்த எண்ணிற்கு ஓடிபி அனுப்ப வேண்டும்.
  • பிறகு உங்கள் ஓடிபி எண்ணை பதிவிட்டு உங்களின் சுயவிவர பக்கத்திற்கு சென்று அதில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
  • இப்போது, நீங்கள் TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான முகப்பு திரை உருவாகும். அதில் உங்களுடைய மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
    • பிறகு பிடிஎப் வடிவில் உங்களின் விவரத்தை பதிவிறக்கம் செய்து அதை வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று சமர்ப்பித்தால் மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.
    • புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 1800 425 5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.