ரூ1000 உதவி: ரேஷன் கார்டில் குடும்பத்தலைவி படம் கட்டாயமா?

Latest News

தமிழக அரசின் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 ஊக்கத்தொகை பெறுவதற்கு ரேஷன் அட்டையில் குடும்ப தலைவி புகைப்படம் இருக்க வேண்டும் என்று தகவல் வெளியானதால், குடும்ப தலைவர் படம் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் அட்டையை திருத்தம் செய்ய வட்டாச்சியர் அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர்.

தமிழத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக தேர்தல் பிரச்சாரத்தின் பொது மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 ஊக்கதெதொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இதில் பெண்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயண திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேஷன் அட்டையில் குடும்ப தலைவியின் புகைப்படம் இருந்தால் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று நியாயவிலைக்கடை ஊழியாகள் கூறியதாக வெளியான தகவலை அடுத்து ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர் புகைப்படம் உள்ள நபர்கள் தங்களது குடும் அட்டையில் மாற்றம் செய்ய வட்டாச்சியர் அலுவலகம் மற்றும் ஆன்லைன் முறையிலும் விண்ணப்படங்களை அளித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகதா நிலையில், மக்கள் கொரோனா தொற்றையும் பொருட்படுத்தாமல் அரசு அலுவலஙகளில் குவிந்து வருகின்றனர்.

இப்படி குடும்ப அட்டையில் புகைப்படம் மாற்ற வரும் நபர்களிடம் சில இடைத்தரகர்கள் பணம் பெற்றுக்கொள்வதாகவும், தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த நிலை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசு தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மக்கள் தாமாகவே முன்வந்து ரெஷன் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் அளித்து வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக அரசு வழிகாட்டுதல் கிடைத்தவுடன் நாங்களாகவே, குடும்ப அட்டைதாரரை அழைத்து, மாற்றி விடுவோம். இதனால் தேவையின்றி மக்கள் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.