மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

Latest News

மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Commanndant (Civil Engineer)

காலியிடங்கள்: 25

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை போஸ்டல் ஆர்டர் அல்லது DIG, Group Centre, CRPF, Rampur Payable at SBI-Rampur பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ww.crpf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனைடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பும் கவரின் மீது Central Reserve Police Force Assistant Commanndant(Engineer/Civil) Exam, 2021 என்று குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

DIG, Group Centre, CRPF, Rampur, U.P – 244 901

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர் கடைசி தேதி: 29.07.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.