மத்திய சுரங்க மற்றும் எரிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Job Notification Latest News

நாக்பூரில் செயல்பட்டு வரும் மத்திய சுரங்க மற்றும் எரிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் மற்றும் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 39

பணி: Project Assistant
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.20,000
தகுதி: இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது புவியியல் அல்லது வேதியியல் பாடப்பிரிவில் ஹானர்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Project Associate-I
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.25,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மைனிங், மெக்கானிக்கல், கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Applied Geology, Applied Chemistry- இல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Associate-II
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.28,000
தகுதி: பொறியியல் துறையில் மைனிங், கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cimfr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதவ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
CSIR-CIMFR Research Centre, 17/C, Telenkhedi Area, Civil Line, Nagpur, Maharashtra – 440 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.08.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.