மத்திய ஆயுதப்படையில் 22,424 காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு

ARMY Job Notification Latest News

மத்திய ஆயுதப் படையில் காலியாக இருக்கும் சுமார் 22,424 பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்ப விவரங்கள், கல்வித் தகுதி, தேர்வுகள் குறித்த விளக்கம் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை பணி

தமிழக அரசுத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பணிகள் சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதித்தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை கடந்த சில வாரங்களுக்கு முன்னாக நடைபெற்றது. இந்நிலையில் மத்திய ஆய்வுப் படையில் காலியாக இருக்கும் சுமார் 22,424 பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய ஆயுதப்படை காவலர் பணியில் NIA, SSF ல் கான்ஸ்டபிள், அசாம் ரைபிள்ஸில் ரைபிள் மேன் உள்ளிட்ட பணிகளில் சுமார் 22,424 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த இடங்கள் அனைத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட இருக்கிறது. குறிப்பாக இந்த தேர்வில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 10% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் 18 முதல் 23 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

இவர்கள் மெட்ரிக் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகம் மூலம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்திருக்க வேண்டும். இந்த தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக செலுத்த வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in என்ற இணையதள முகவரியையும், exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தவும். மேலும் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை 0421-4971127 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.