பாரத ஸ்டேட் வங்கியில் 6100 பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி

Job Notification Latest News

பொதுத்துறை வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியின் பெயர்: Apprenticeship Training

காலியிடங்கள்: 6,100

உதவித்தொகை: மாதம் ரூ.15,600

வயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழியில் பேசும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: செனனை, மதுரை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், நாகர்கோவில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி இ-ரசீது பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.