நோய்கள் பற்றிய முக்கிய வினாக்கள்

Latest News

நோய்கள் பற்றிய முக்கிய வினாக்கள்

1) பிளாஸ்மோடியம் என்னும் நுண்ணுயிரி மூலம் —————– நோய் பரவுகிறது?

A) அமீபிக் சீதபேதி

B) காசநோய்

C) இன்புளுயன்சா

D) மலேரியா✅
 

2) காலரா நோய் —————— பாக்டீரியாவினால் ஏற்படுகிறது?

A) விப்ரியே காலரே✅

B) பைலேரியா

C) இன்புளுயன்சா

D)பிளாஸ்மோடியம் பால்சிபாரம்

3) HIV வைரஸை கண்டறிந்தவர் யார்?

A) லுக் மாண்டேக்னியர், சர்ரோனால்டு ராஸ்

B) லுக் மாண்டேக்னியர், இராபர்ட் கேலோ✅

C) லுக் மாண்டேக்னியர், இராபர்ட் கோச்

D) லுக் மாண்டேக்னியர், லூயிபாஸ்டர்
 

4) டைஃபாய்டு காய்ச்சலுக்கு பயன்படும் மருந்து எது?

A) ஐசோனியாசிட்

B) பைரமினமைட்

C) எதம்பியூட்டோல்

D) குளோரோமைசிடின்✅
 

5) காச நோய்க்கு சிறந்த உயிர் எதிரி ————– ஆகும்.

A) எபிடெர்மோபைட்டான்

B) மைக்ரோஸ்போரம்

C) ஸ்ட்ரெப்டோமைசின்✅

D) ட்டிரைக்கோபைட்டான்
 

6) காற்றின் மூலம் பரவும் நோய் எது?

A) காசநோய்✅

B) ஸ்கர்வி

C) மலேரியா

D) படர் தாமரை
 

7) டிஃப்தீரியாவால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

A) வாய்

B) தொண்டை✅

C) உணவுக் குழாய்

D) கழுத்து
 

8) வைட்டமின் B12 குறைவினால் ஏற்படும் நோய் எது?

A) பெல்லாக்ரா

B) மலட்டுத்தன்மை

C) பெர்னீசியஸ் அனிமியா✅

D) இரத்தம் உறையாமை
 

9) ஹெப்படைடிஸ் என்ற நோயால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

A) தொண்டை

B) தலைப் பகுதி

C) மண்ணீரல்

D) கல்லீரல்✅
 

10) மலேரியா பரவுவதற்கு காரணமான கொசு எது?

A) அனஃபிலஸ் பெண் கொசு✅

B) எண்டமீபா ஹிஸ்டலைடிகா

C) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

D) சால்மோனல்லா டைஃப்பி
 

11) புரோட்டோசோவா நுண்ணுயிரி —————– பெருங்குடலில் பரவி அமீபிக் சீதபேதியை ஏற்படுத்தும்

A) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

B) டிரிப்போனோசோமா கேம்பியேன்சி

C) எண்டமீபா ஹிஸ்டோலைடிகா✅

D) டீனியா சோலியம்

12) —————— வைட்டமின் குறைவினால் பெரிபெரி நோய் ஏற்படுகிறது?

A) வைட்டமின் B 12

B) வைட்டமின் B 1✅

C) வைட்டமின் C

D) வைட்டமின் B 5

Leave a Reply

Your email address will not be published.