நாளை TNPSC GROUP 1 தேர்வு எழுதுபவர்களுக்கு….

Latest News
நாளை தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்கள்..

தேர்வு அறைக்கு முன்பே சென்று விடுங்கள்.. தேர்வறையில் அமர்ந்து சிறிது நேரம்..மனதினையும் சிந்தனையும் ஒரு சேர அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்… பதட்டப்பட வேண்டாம்….கேள்வித்தாளை பிரித்து
அனைத்து கேள்விகளையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்..

தெரியாத கேள்விகள்என்று பதட்டப்பட வேண்டாம்..நிச்சயம் நன்கு தெரிந்த கேள்விகளும் இருக்கும்..நேர மேலாண்மை என்பது மிக முக்கியம் என்பதால்
தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் அளியுங்கள்..தெரியாத கேள்விகளுக்கு யோசித்து கொண்டிருக்க வேண்டாம்…தெரியாத கேள்விகளுக்கு யோசித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்
தெரிந்த கேள்விகளுக்கு முதலில் மிக கவனமாக விடைத்தாளில்
விடை அளியுங்கள்..

பின்பு தெரியாத கேள்விகளுக்கு யோசித்து பதில் அளியுங்கள்..இவ்வாறு நிரப்பும்போது விடைத்தாள் எண்ணை சரி பார்த்து நிரப்புங்கள்…கவனக்குறைவாக நிரப்பினால் மதிப்பெண் இழக்க நேரிடும்..விடைத்தாளை நிரப்புவதில் மிகவும் கவனம் இருக்கட்டும்
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வீடியோவை மறுபடி ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்…விடைத்தாளை நிரப்புவதில் மிக கவனம் இருக்கட்டும்….

பதட்டமில்லாமல் விடைத்தாளின் புதிய பகுதியினை சற்று கவனமாக நிரப்புங்கள்..ஐந்து மதிப்பெண்
மிகவும் முக்கியம்..எனவே கவனமுடன் அப்பகுதியை நிரப்புங்கள்…ஒரு வருடம் பட்ட கஷ்டங்களுக்கு பலன் நாளை நீங்கள் எழுதப்போகும் தேர்வு கவனமுடன் இருங்கள்.. தேர்வினை சிறப்பாக தேர்வு எழுதுங்கள்…

நாளை தேர்வு எழுதப்போகும் குரூப்-1 அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published.