தேன்(Honey)

Latest News

தேன் என்பது தேனீயின் இராண்டவது இரைப்பையில் இருந்து பெறப்படுவது ஆகும். தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவது இல்லை. பதப்பபடுத்தப் படாத தேனில் 14% – 18% ஈரத்தன்மை உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது. பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.