தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்பு 2022 !!!

Job Notification Latest News

முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

பணியிட விபரங்கள்:

1. மருந்தாளர் (Pharmacist)

மொத்தம் 889 காலியிடங்கள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

i) D.Pharm (Diploma in Pharmacy) அல்லது B.Pharm (Bachelor of Pharmacy) அல்லது Pharm. D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) தமிழ்நாட்டில் மருந்தக கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் புதுப்பிப்பதன் மூலம் பதிவை உயிருடன் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-07-2022 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC & DNC விண்ணப்பதாரர்கள் 59 வயது வரையும் OC விண்ணப்பதாரர்கள் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விகிதம்:

மாத ஊதியமாக அரசு பே மேட்ரிக்ஸ் லெவல்-11 ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 35,400 தொடங்கி அதிகப்பட்சம் ரூ. 1,12,400 வரை வழங்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க SC / SCA / ST / DAP( H) விண்ணப்பதாரர்கள் ரூ. 300/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைவரும் விண்ணப்பிக்க 600/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

குறிப்பு:-

ஏற்கனவே அறிவிப்பு எண். 13/MRB/2019, தேதி: 01.03.2019 இன் படி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த புதிய அறிவிப்பின்படி மீண்டும் ஒருமுறை விண்ணப்பிக்க வேண்டும்.

இருப்பினும் அவர்கள் மீண்டும் ஒருமுறை தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை, மேலும் வாரியத்தால் ஒதுக்கப்பட்ட அவர்களின் முந்தைய விண்ணப்ப எண்ணுடன் வழங்கப்பட்ட கட்டண விவரங்கள் நெடுவரிசையில் ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டண விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

i) தமிழ் மொழி தகுதித் தேர்வு (SSLC தரநிலை)

தேர்வு 1 மணி நேரம் நடைபெறும். அதிகப்பட்ச மதிப்பெண்கள் 50. இதில் குறைந்தப்பட்சம் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும்.

ii) கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) / எழுத்துத் தேர்வு ஆப்டிகல் மார்க் ரீடரில் (OMR) – மருந்தாளுனருக்கான குறிக்கோள் வகை ஒற்றை தாள் தேர்வு.

தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். அதிகப்பட்ச மதிப்பெண்கள் 100. இதில் குறைந்தப்பட்சம் SC/SCA/ST விண்ணப்பதாரர்கள் 30% மற்றும் பிறர் 35% மதிப்பெண்கள் பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-08-2022

அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

OFFICIAL NOTIFICATION PDF

CLICK HERE

To Join Our Telegram Click here

To Join our WhatsApp Click here

YouTube subscribe. Click here

Follow Instagram. Click here

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.