தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ (TNPSC) வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு

Latest News

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள்‌ நடத்தப்பட்டன. தேர்வுகளில்‌ கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள்‌ பெற்ற மதிப்பெண்கள்‌, இடஒதுக்‌கீட்டு வித மற்றும்‌ அப்பதவிகளுக்கான அறிவிக்கைகளில்‌ வெளியிடப்பட்ட பிற பதவிகளின் அடிப்படையில்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு மற்றும்‌ நேர்முகத்‌ தேர்விற்குத்‌ தற்காலிகமாகத்‌ தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ பதிவெண்கள்‌ கொண்ட பட்டியல்கள்‌ தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

2015-2019 ஆம்‌ ஆண்டுகளுக்கான தமிழ்நாடு தடய அறிவியல்‌ சார்நிலை பணிகளில்‌ அடங்கிய இளநிலை அறிவியல்‌ அலுவலர்‌ பதவிக்கு 72 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

இப்பணிக்கான தேர்வானது 24.08.2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் 8,851 தேர்வர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இப்பணிக்கு சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்குத்‌ தற்காலிகமாகத்‌ தெரிவு செய்யப்பட்டவர்களின்‌ சான்றிதழ்‌களைத் தேர்வாணைய இணையதளத்தில்‌ அரசு கேபிள்‌ டிவி நிறுவனம்‌ நடத்தும்‌ அரசு இ-சேவை மையங்கள்‌ மூலமாக 18.04.2022 முதல் 26.04.2022 வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சார்நிலைப்‌ பணிகளில் கட்டிடகலை உதவியாளர்‌ / திட்ட உதவியாளர் பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதற்கு 08.01.2022 அன்று எழுத்து தேர்வு நடைபெற்றது. இதை மொத்தம் 5572 பேர் எழுதி உள்ளனர். இப்பணிக்கு 11+1 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்ச்சி அடைந்துள்ளனர். நேர்முக தேர்வானது 28.04.2022 அன்று நடைபெற உள்ளது.

தமிழ்நாடு பொது சார்நிலைப்‌ பணி அடங்கிய ஆராய்ச்‌சி உதவியாளர் பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 22.01.2022 அன்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

இதை மொத்தம்1437 பேர் தேர்வு எழுதி உள்ளனர். இப்பணிக்கு 18 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்ச்சி அடைந்துள்ளனர். நேர்முக தேர்வானது 28.04.2022 அன்று நடைபெற உள்ளது.

Whatsapp Join:

http://bit.ly/3vbc8Vg

Telegram Join:

https://t.me/tamizha_academy_channel

Like, Share & Subscribe 👆👍 

Leave a Reply

Your email address will not be published.