தமிழக கோவில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் – அமைச்சர் அறிவிப்பு!

Latest News

தமிழகத்தில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது அறநிலையத்துறை ஆகும். இந்த துறை சார்பில் மாநில அளவில் ஒரு தலைமை செயலகம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் தற்காலிகமாக 5 ஆண்டுகள் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு இது குறித்து கூறுகையில், தமிழக கோவில்களில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தற்காலிக பணியாளர்கள் ஒரு மாதத்திற்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் எனவும் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு இருப்பவர்கள் அதை ஒத்துக் கொண்டு திருக்கோவிலுக்கு உரிய மனுவை அளித்து வாடகைதாரர் ஆக ஏற்று உத்தரவு வழங்கப்படும்

Leave a Reply

Your email address will not be published.