தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2022 – டிகிரி படித்தவர்க்கு ரூ.30,000 ஊதியம்..!

Job Notification Latest News

காஞ்சிபுரத்தில் உள்ள One Stop Centre எனும் ஒரு நிறுத்த மையத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Case Worker, Security Guard, Multi-Purpose Helper ஆகிய பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

OSC Job காலிப்பணியிடங்கள்:

Case Worker பணிக்கு 4 பணியிடங்கள், Centre Administrator, Senior Counsellor, Security Guard மற்றும் Multi-Purpose Helper ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Kancheepuram Job கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree, Master Degree முடித்திருக்க வேண்டும். மேலும் கல்வித் தகுதி குறித்து அறிவிப்பில் காணலாம்.

OSC Job முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 1 ஆண்டு counselling பிரிவில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 4 ஆண்டுகள் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Kancheepuram Job ஊதிய தொகை:

  • Centre Administrator பணிக்கு ரூ.30,000/- என்றும்,
  • Senior Counsellor பணிக்கு ரூ.20,000/- என்றும்,
  • Case Worker பணிக்கு ரூ.15,000/- என்றும்,
  • Security Guard பணிக்கு ரூ.10,000/- என்றும்,
  • Multi-Purpose Helper பணிக்கு ரூ. 6,400/- என்றும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதிய தொகை பெறுவார்கள்.

OSC Job தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kancheepuram Job விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 23.06.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

Download Notification & Application PDF

Official Website

Leave a Reply

Your email address will not be published.