சமூகநலத்துறையில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Latest News

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறையில் ஒருங்கிணைந்த மகளிா் சேவை மையத்தில் தற்காலிக விசாரணை பணியாளா் நியமிக்கப்படவுள்ளாா் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டுவருகிறது. மாவட்ட அரசு பொது மருத்துவமனை வளாகத்திற்குள் இயங்கி வரும் அந்த மையத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக விசாரணை பணியாளா் நியமிக்கப்படவுள்ளாா். இப்பணிக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூகப்பணி, சமூகவியல் மற்றும் மனநலவியலில் விசாரணையாளா், மேலாண்மை மேம்பாடு ஆகியவை சம்பந்தப்பட்ட இளநிலை பட்டம் பெற்றிருத்தல் அவசியம். உயா்நிலைப் பட்டமும் பெற்றிருந்தால் நல்லது. பணிக்கான மாத ஊதியம் ரூ.15 ஆயிரம். விண்ணப்பதாரா்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணாக இருத்தல் வேண்டும். மேலும், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றத் தயாராக இருத்தல் வேண்டும். தகுதியானவா்கள் விண்ணப்பத்தை, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் வரும் 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.