தமிழகத்தில் தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் பணி புரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மற்றும் ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சத்துணவுத்துறையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒன்றியங்களில் காலியாக உள்ள சத்துணவு திட்டப் பிரிவில் வட்டார கணினி இயக்குபவர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மற்றும் ராதாபுரம் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி இயக்க தெரிந்திருந்தவராக இருக்க வேண்டும்.
மேலும் 01.07.2022 அன்று நிலவரப்படி 21 வயது முதல் 40 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியில் நியமிக்கப்படுவோருக்கு ரூ.12,000 மாத சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து
மாவட்ட ஆட்சித் தலைவர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,
சத்துணவு பிரிவு,
3ஆவது தளம்,
கொக்கிரகுளம்,
திருநெல்வேலி – 9
என்ற அஞ்சல் அலுவலக முகவரிக்கு வருகிற ஜூலை 5ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
To Join Our Telegram Click here
To Join our WhatsApp Click here
YouTube subscribe. Click here
Follow Instagram. Click here
Thanks For Visiting.
All The Best For Your Exams & Future.
Be Positive .Be Brave. Hope Your Self …