கடல் நீல நீறமாக தோன்ற காரணம்

Latest News

கடல் சூரியனின் ஒளிக் கற்றைகளின் வண்ணப் பட்டியை (spectrum) வடிகட்டுகிறது. அதன் நீர் சிவப்புக் கற்றைகளை உள்வாங்கி விடுகிறது. எஞ்சிய நீலக் கற்றைகள் கடலின் நிறமாய் நமக்குத் தோன்றுகிறது.பல சமயம் கடல் நீர் பச்சை, பழுப்பு, சிவப்பு நிறங்களில் காணப்பட்டால் அதன் பொருள் கடல் நீரிலுள்ள வண்டல்கள், துகள்களின் மீது சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிக்கிறது என்பதுதான்.கடல் நீர் ஓரளவுக்கு மேல் இருட்டாகத்தான் இருக்கும். 656 அடி வரை ஓரளவு ஒளி நீரை ஊடுருவும். ஆனால் 3280 அடிக்கும் கீழுள்ள நீருக்குள் ஒளி ஊடுருவிப் பாய்வது சற்றும் இல்லை.கடல் நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்தால் அந்நீர் நீலமாக இருப்பதில்லை.வானத்தின் நிறத்தைப்பிரதிபலிப்பதாலும்,சில கடல் வாழ்நுண்ணுயிர்களாலும்,சூரியனது ஒளிக்கதிர்கள் காரணமாக நீரில் ஏற்படும் மாற்றங்களாலுமே கடல் நீலமாகத்தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.