எளிதாக ரேஷன் கார்ட்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

Latest News

ரேஷன் கார்ட் தேவை என்பது பிரதானமாக இருக்கிறது. ரேசன் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரை நீக்குதல் சேர்த்தல் ஆகிய பணிகளை ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளலாம். ரேஷன் கார்டு தேவை மற்றும் பயன்பாடு குறித்து அனைவரும் அறிந்ததே. இதன் முழு விவரங்களை பார்க்கலாம்.

பலரும் முக்கிய ஆவணங்களை புகைப்படமாக செல்போனிலோ அல்லது தங்களுடனோ வைத்திருப்பது வழக்கம். மேலும் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்ட், பான் கார்ட் போன்ற பல அடையாள ஆவணங்கள் புகைப்படமாக ஸ்மார்ட்போனில் வைத்திருப்பதன் காரணமாக ஒரிஜினல் ஆவணத்தின் மீதான கவனம் குறைந்துவிடுகிறது. அப்படி சில சமயங்களில் நம்மையும் அறியாமல் ஆவணங்கள் தொலைந்துவிடுவது வழக்கம். இருப்பினும் இதில் ரேஷன் கார்ட் என்பது மாதத்திற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் கருவியாகும்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி பிரதான நடவடிக்கையாக தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் கொரோனா நிவாரணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது.

கொரோனா உதவித் தொகையாக முதல் தவணையாக ரூ.2000 எனவும் இரண்டாவது தவணையாக ரூ.2000 என மொத்தம் ரூ.4000 தமிழ அரசு வழங்கியது. இவை உட்பட பல்வேறு சலுகைகள், மாதாந்திர நியாய விலை பொருட்கள் என அனைத்தும் ரேஷன் கார்ட் மூலமாகவே வழங்கப்படுகிறது. ரேஷன் கார்ட் தொலைந்துவிட்டது என்றாலோ புதிதாக பெயர் இணைப்பு நீக்கம் என பல பயன்பாடுகளையும் ஆன்லைன் மூலம் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

பலரும் ரேஷன் கார்ட் என்றவுடன் இதுதொடர்பான வேலைகளுக்கு நேரில் செல்ல வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். ஆனால் இதற்கான பணிகளையும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளலாம். நேரில் அலுவலகம் சென்று அலைய வேண்டிய தேவையில்லை. குறிப்பாக இது போன்ற கொரோனா தொற்று பரவல் காலங்களில் வீட்டில் இருந்தபடியே இதுபோன்ற பணிகளை மேற்கொள்வது என்பது பாதுகாப்பான வழிமுறைகள் ஆகும்.
முதலில் ரேஷன் கார்ட் தொடர்பான பணிகளை மேற்கொள்ள Tamil nadu public distribution Service என்ற TNPDS வலைதளத்திற்கு செல்ல வேண்டும். இணைப்புக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். TNPDS
இதில் சுயவிவர பதிவை தேர்வு செய்தவுடன் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். இந்த ஓடிபி எண்ணை சரியாக பதிவு செய்தவுடன் அடுத்த பக்கத்திற்கு முன்னோக்கி அழைத்து செல்லப்படுவிர்கள்.

சுயவிவர பக்கத்துக்கு சென்றவுடன் TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் விருப்பம் காண்பிக்கப்படும். இதில் நீங்கள் விரும்பிய மொழியை தேர்ந்தெடுத்து அச்சிடு என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதே பிடிஎஃப் ஃபைலை சேமித்து வைத்துக் கொள்ளும் விருப்பமும் காண்பிக்கப்படும்.

அவ்வளவுதான் நீங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணத்தை எடுத்துக் கொண்டு தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு சென்று புதுப்பிக்கப்பட்ட ரேஷன் கார்ட்டை பெறலாம். மெசேஜ் மூலமாக உதவி மற்றும் தகவல்களை அணுகலாம். இதற்கு 1967 அல்லது 1800 425 5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.