எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

Latest News
NIELIT Apply For Scientist -'B' and Scientific/Technical Assistant - 'A'  posts

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி (என்.ஐ.இ.எல்.ஐ.டி.,) நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : சயின்டிஸ்ட் ‘பி’ 18, சயின்டிபிக் அசிஸ்டென்ட் ‘ஏ’ 63 என மொத்தம் 81 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : இரண்டு பதவிகளுக்கும் எம்.எஸ்சி., (எலக்ட்ரானிக்ஸ் / கம்ப்யூட்டர்/ ஐ.டி., / இயற்பியல்), எம்.சி.ஏ., பி.இ., / பி.டெக்., என ஏதாவது ஒரு படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.800. பெண்கள்/ எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 400.

கடைசி நாள் : 9.7.2021 மாலை 5:30 மணி.

விபரங்களுக்கு

Leave a Reply

Your email address will not be published.