இலவச சமையல் எரிவாயு பெற விண்ணப்பிப்பது எப்படி? உஜ்வாலா 2.0 திட்டம் துவக்கம்

Latest News

உத்தரபிரதேசம் மாநிலம் மஹோபா மாவட்டத்தில் இன்று உஜ்வாலா 2.0 திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த திட்டத்தில் பயன் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு உதவி செய்யும் விதத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வருகிறார். மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டம் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பட்டியலின, பழங்குடியினர், பிரதமரின் ஆவாஸ் யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், வனவாசிகள், தீவுகள் போன்ற பிரிவுகளை சேர்ந்த சுமார் 5 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்திற்கு குறைந்தபட்ச ஆவணங்களே தேவைப்படுகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த திட்டத்தை பெறுவதற்கு குடும்ப அட்டை அல்லது நிலையான இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவை தேவையில்லை. குடும்ப உறுப்பினர்களின் விவரம் மற்றும் குடும்ப சான்று மட்டுமே தேவைப்படுகின்றன.
புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த திட்டத்தை பெறுவதற்கு குடும்ப அட்டை அல்லது நிலையான இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவை தேவையில்லை. குடும்ப உறுப்பினர்களின் விவரம் மற்றும் குடும்ப சான்று மட்டுமே தேவைப்படுகின்றனர்.

  • விண்ணப்பதாரர் கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும்
  • விண்ணப்பிக்கும் பெண்ணிற்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்
  • பெண்ணின் குடும்பம் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்
  • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதற்கான ஆவணம் கட்டாயம் தேவை
  • விண்ணப்பதாரரின் எந்த குடும்ப உறுப்பினரின் பெயரிலும் எல்பிஜி இணைப்பு இருக்க கூடாது.

மேலும் இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள எல்பிஜி விநியோக நிறுவனத்தில் வழங்கி ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் pmujjwalayojana.com சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.