இந்திய விமானப்படையில் அட்டகாசமான வேலைவாய்ப்பு 2022 – AFCAT நுழைவுத்தேர்வு விவரங்கள்..!

Latest News
இந்திய விமானப்படையில் அட்டகாசமான வேலைவாய்ப்பு 2022 – AFCAT நுழைவுத்தேர்வு விவரங்கள்..!

இந்திய விமானப்படை ஆனது இந்த ஆண்டுக்கான Air Force Common Admission Test (AFCAT) க்கான அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Commissioned Officer பணிகளுக்கு என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்ப திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே இந்திய விமானப்படையில் பணி புரிய விரும்புவோர் இப்பதிவை முழுமையாக வாசித்து அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு அதன்பின் எளிமையாக விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்Air Force Common Admission Test (AFCAT)
பணியின் பெயர்Commissioned Officer
பணியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி30.06.2022
விண்ணப்பிக்கும் முறைOnline
AFCAT காலிப்பணியிடங்கள்:

இந்திய விமானப்படை தற்போது வெளியிட்ட AFCAT தேர்வு அறிவிப்பில் Commissioned Officer பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Indian Air Force கல்வித் தகுதி விவரம்:

இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 வது மற்றும் 12 வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, Any Degree, B.Com, BBA, B.Sc, CA ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

AFCAT வயது விவரம்:

Flying Branch பிரிவு பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Ground Duty (Technical/ Non-Technical) Branches பிரிவு பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சம் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Indian Air Force ஊதிய விவரம்:

இந்திய விமானப்படை பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மத்திய அரசு ஊதிய அளவின்படி, 7th CPC Level 10 என்கிற அளவில் குறைந்தது ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை மாதம் ஊதியம் பெறுவார்கள்.

மேலும் இந்த இந்திய விமானப்படை பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை பற்றி அறிவிப்பில் காணலாம்.

AFCAT விண்ணப்பக் கட்டண விவரம்:

இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதில் NCC Special Entry மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

Indian Air Force தேர்வு முறை விவரம்:

இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

AFCAT விண்ணப்பிக்கும் முறை:

இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க  தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், உடனே இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 30.06.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Air Force Official Notification PDF

Indian Air Force Online Application Link

Leave a Reply

Your email address will not be published.