இந்திய தபால் துறையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Latest News

இந்திய தபால் துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை கீழே தெளிவாக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதார்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம்இந்திய தபால் துறை
பணியின் பெயர்தபால்காரர், அஞ்சல் காவலர் & எம்டிஎஸ்
பணியிடங்கள் 100000 +
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறைOffline

இந்திய தபால் துறை காலிப்பணியிடங்கள்:

நாடு முழுவதும் 23 வட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் படி, இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 59,099 தபால்காரர் பணியிடங்களும், 1445 அஞ்சல் காவலர் பணியிடங்களும், 37,539 பல்பணி பணியிடங்களும் காலியாக உள்ளன.

இவற்றுடன், ஸ்டெனோகிராபர் தொடர்பான பணியிடங்களும் வட்டம் வாரியாக அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் 2289 தபால்காரர் பணியிடங்களும், 108 அஞ்சல் காவலர் பணியிடங்களும், 1166 எம்டிஎஸ் பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. தெலுங்கானா வட்டத்தின் கீழ், 1553 தபால்காரர்கள், 82 அஞ்சல் காவலர்கள், 878 எம்டிஎஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை 6130 தபால்காரர் பணியிடங்களும், 128 அஞ்சல் காவலர் பணியிடங்களும், 3316 எம்டிஎஸ் பணியிடங்களும் காலியாக உள்ளன. அதாவது மொத்தம் 9574 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச வயது குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சமாக 32 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

படி 1: India Post -indiapost.gov.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்

படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள ஆட்சேர்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுக்கவும், தகுதிக்கான அளவுகோல்களைச் சரிபார்க்கவும்

படி 4: படிவத்தை நிரப்பவும்

படி 5: கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பிக்கவும்

படி 6: மேலும் பயன்படுத்த ஒப்புகை படிவத்தை பதிவிறக்கம் செய்து சேமித்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Official Website LInk

To Join Our Telegram Click here

To Join our WhatsApp Click here

YouTube subscribe. Click here

Follow Instagram. Click here

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.