இந்தியன் வங்கியில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

Latest News
இந்தியன் வங்கியில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Security Guard பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (15.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Security Guard பணிக்கு என்று மொத்தமாக 20 பணியிடங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும். மேலும் விண்ணப்பதாரர்கள் டிகிரி படித்தவராக இருந்தால் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
  • விண்ணப்பதாரர்கள் 01.05.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 26 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு என அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
  • Security Guard பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.14,500/- முதல் அதிகபட்சம் ரூ.28,145/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Test), உடல் தகுதித் தேர்வு (Physical Test) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

IOB விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (15.06.2022) மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IOB Notification & Application Link

Thanks For Visiting.

All The Best For Your Exams & Future.

Be Positive .Be Brave. Hope Your Self …

Leave a Reply

Your email address will not be published.