ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

Job Notification Latest News

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Assistant (Clerk cum Computer Operator)

காலியிடங்கள்: 120

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.26,600 – 90,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும்முறை: 
சிபிடி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி. எஸ்டி, பொருளாதாரத்தில் பின்தங்கி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் மறறும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை:
 
https://www.oil-India.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.08.2021

Download Notification

Leave a Reply

Your email address will not be published.