ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு புதிய வசதி – விஐடி அறிமுகம்

Latest News

உள்ள ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு தற்போது விஐடி அல்லது MASKED ஆதார் என ஆன்லைன் மூலமாக பயன்படுத்தும் வசதியை அறிவித்துள்ளது.

ஆதார் அட்டை:

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது வரை ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் அட்டைதாரர்களுக்காக ‘மெய்நிகர் ஐடி (விஐடி) அல்லது MASKED ஆதார்’ எனப்படும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலமாக பல நன்மைகள் கிடைக்கிறது.

தங்கள் ஆதார் அட்டைக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்த விஐடி அல்லது MASKED ஆதார் விருப்பத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் உங்களது ஆதார் அட்டையின் விவரங்களை வெளியிடவில்லை என்றால் அதற்கு பதிலாக விஐடியை பயன்படுத்தலாம். இது உருவாக்கப்பட்டதும், ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதைப் போன்றே விஐடியைப் பயன்படுத்தி அங்கீகாரம் செய்ய முடியும். விஐடியிலிருந்து ஆதார் எண்ணை எடுக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 • உங்கள் ஆதார் மெய்நிகர் ஐடியை (விஐடி) எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
 • UIDAIயின் அதிகாரபூர்வ இணையத்தை திறக்க வேண்டும்.
 • அதில் ஆதார் சேவைகள் பிரிவின் கீழ் மெய்நிகர் ஐடி (விஐடி) ஜெனரேட்டர் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு “Send OTP” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உங்களது OTPயை உள்ளிட வேண்டும்.
  • இப்போது, தொடர “விஐடியை உருவாக்கு” விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் மெய்நிகர் ஐடியை (விஐடி) வரும்.
  • எஸ்எம்எஸ் மூலம் ஆதார் மெய்நிகர் ஐடியை (விஐடி) உருவாக்குவது அல்லது மீட்டெடுப்பது எப்படி ஆதார் விஐடியை உருவாக்க, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை தட்டச்சு செய்து, பதிவுசெய்த மொபைல் எண் மூலம் 1947 க்கு அனுப்ப வேண்டும்.
  • நீங்கள் ஆதார் விஐடியை மீட்டெடுக்க விரும்பினால், உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை தட்டச்சு செய்து, பதிவுசெய்த மொபைல் எண் மூலம் 1947 க்கு அனுப்ப வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.